Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ஜூலை மாதத்தில் வெளியாகிறது பாலாவின் வணங்கான் திரைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வணங்கான். முதலில் இந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகினார், ஆனால் பாலா சூர்யா இடையேயான கருத்து மோதல் காரணங்களால் அவர் இப்படத்திலிருந்து விலகினார்.

அதைத் தொடர்ந்து, சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய் இந்த படத்தில் இணைந்து நடிக்கத் தொடங்கினார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ஜி.வி. பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். அருண் விஜய் சமீபத்தில் மிஷன் சாப்டர் 1 என்ற படத்தில் நடித்தார், இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் ஆனது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அவர் ரெட்ட தல என்ற படத்திலும் நடித்து வருகிறார். வணங்கான் திரைப்படத்தில் அருண் விஜயுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படம் ஜூலை மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகுமென அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News