கடைசியாக ரஜினிகாந்த் – நயன்தாரா நடித்த ‘தர்பார்’ படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய பிறகு, அந்த படம் எதிர்பார்த்த வெற்றியடையாததால் அவர் சினிமாவில் சில காலம் ஒதுங்கி இருந்தார்.
இப்போது, ஏ.ஆர். முருகதாஸ் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு பிறகு, பாலிவுட் நடிகர் சல்மான்கானை வைத்து புதிய இந்தி படத்தை இயக்க உள்ளார். இதில், சல்மான்கானுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கின்றார்.
இந்த படம் “புராணக் கதை” எனப்படும். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரிக்கிறார். மேலும், சல்மான்கான் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சஜித் நதியத்வாலாவுடன் மீண்டும் இணைகிறார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கும் புதிய படத்துக்கு ‘சிக்கந்தர்’ என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் என்றும், சல்மான்கான் தனது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அறிவித்திருந்தார்.இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் 18 ஆம் தேதி தொடங்கும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.