Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

ஜீன்ஸ் படத்தின் பாடலை போல் கேம் சேன்ஜர் படத்தின் பாடலில் ஷங்கர் செய்த அசத்தலான விஷயம்… என்னனு பாக்கலாம் வாங்க! #GAME CHANGER

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் ஷங்கர், ‘ஜீன்ஸ்’ படத்தில் வரும் “பூவுக்குள் ஒளிந்திருக்கும்” பாடலில் ஏழு உலக அதிசயங்களையும் காட்சிப்படுத்தியிருந்தார். அதேபோல், தற்போது அவர் இயக்கி வரும் ‘கேம் சேஞ்சர்’ படத்திலும் ஒரு வித்தியாசமான பாடல் இடம்பெற்றுள்ளது. தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே. சூர்யா, சுனில், ஜெயராம், அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் பாடல் ராம் சரண் பிறந்தநாளில் வெளியானது.

‘ஜீன்ஸ்’ படத்தில் ஏழு அதிசயங்களை காட்டியதைப் போல, இந்தப் படத்தில் ஷங்கர் ஏழு மாநிலங்களின் பெருமையை சிறப்பிக்கும் விதமாக இந்தப் பாடலை இயக்கியுள்ளார்.

கேரளாவில் செண்டை மேளம் போன்ற ஒவ்வொரு மாநிலத்திற்கும் பிரபலமான இசைகளை கொண்டு இந்தப் பாடலை உருவாக்கியுள்ளார். இந்தப் பாடலில் ராம் சரண் நடனம் மற்றும் சில மாநிலங்களின் கலாச்சாரங்கள் மட்டுமே வெளிப்படுத்தப்பட்டுள்ளன. முழு பாடல் வெளியாகிய பிறகே இதன் முழு பொது கருத்தை புரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News