நிஜ வாழ்க்கையில் ஏதாவது ஒரு துறையில் சிறப்பாக சாதனை செய்தவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு திரைப்படங்கள் அவ்வப்போது உருவாகி வருகின்றன. அந்த வரிசையில், எந்திரவியல் மற்றும் விவசாயம் தொடர்பான துறைகளில் பல்வேறு முக்கியமான ஆராய்ச்சிகளை செய்த மறைந்த விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படம் தயாராகி வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் மாதவன் நடிக்கிறார்.

இந்த திரைப்படத்திற்கு ‘ஜி.டி.என்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் யோகி பாபு, ஜெயராம் மற்றும் பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகை ஷிவானி ராஜசேகர் இப்படத்தில் சேர்ந்துள்ளார் என்பதற்கான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அவர் எந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதற்கான தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை. ஜூன் மாதம் அவர் படப்பிடிப்பில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.