நடிகர் சூர்யாவின் கங்குவா படம் அக்டோபர் 10ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. வரலாற்று பின்னணியில் மிகவும் பிரம்மாண்டமாக அதிக பட்ஜெட்டுடன் உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் சிவா இயக்கி முடித்துள்ளார். படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்கள் விரைவில் நடக்கவுள்ள நிலையில் இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது.
இதனிடையே சூர்யா, அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்துள்ள சூர்யா 44 படத்தின் அடுத்தடுத்த கட்ட ஷூட்டிங்குகள் நடந்து வருகின்றன. ஒரு மாதத்தை கடந்து இந்த படத்தின் முதல் கட்ட சூட்டிங் அந்தமானில் நடைபெற்று முடிந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு டீம் சென்னை திரும்பியது. இந்நிலையில் இன்றைய தினம் உதகையில் அடுத்தகட்ட ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக கூறப்பட்டது. படப்பிடிப்பிற்காக ஊட்டி செல்ல கோவை விமானநிலையம் வந்தடைந்த சூர்யாவை ரசிகர்கள் வரவேற்றனர்.
மேலும், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் இந்த சூட்டிங்கில் சூர்யாவுடன் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. உதகையில் தொடர்ந்து பதினைந்து நாட்கள் இந்த சூட்டிங் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.இந்த படத்தின் ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு செய்யப்பட்டு விரைவில் படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படமும் இந்த ஆண்டு இறுதியிலேயே ரிலீஸ் ஆகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.