Tuesday, November 19, 2024

சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கான‌ சர்ஃபிரா படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கை சுதா கொங்கரா ‘சர்ஃபிரா’ எனும் தலைப்பில் இயக்கியுள்ளார். அதன் ட்ரெய்லர் தற்போது வெளிவந்துள்ளது. சூர்யா, அபர்ணா பாலமுரளி நடித்த சூரரைப் போற்று திரைப்படம் தேசிய விருதுகளை வென்றது. சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகை உட்பட பல விருதுகளை பெற்ற அந்த படத்தின் இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் நடித்துள்ளார்.

இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளதுடன், சூர்யா தயாரித்துள்ளார்.சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டைன்மென்ட் சார்பில் சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கான சர்ஃபிரா திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அதிரடியான ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

சூரரைப் போற்று படத்தை ரசித்த ரசிகர்களுக்கு, அப்படத்தில் சூர்யாவுக்கு பதிலாக அக்ஷய் குமார் நடித்தது போலவே இந்த ட்ரெய்லர் உருவாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் சூர்யா கேமியோ வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News