Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

சிவகார்த்திகேயனுக்கு பதிலாக கவின்… உருவாகவிருக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சின்னத்திரையில் பிரபலமாக திகழ்ந்த நடிகர் சிவகார்த்திகேயனின் சினிமா பயணத்திற்கு மிகப்பெரிய திருப்பமாக அமைந்த படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. இந்த படத்தில் போஸ் பாண்டியாக அவர் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய நிலையில், சூரி அவருடன் இணைந்து அதிரடி காட்டினார். இவர்களின் கூட்டணி தொடர்ந்து பல படங்களில் மாஸ் காட்டியது.

இந்த படத்தை இயக்கியவர் பொன்ராம், வசனம் எழுதியவர் எம். ராஜேஷ். இந்த கூட்டிணையின் சேர்க்கையில் படம் மிகப்பெரிய வெற்றியை கண்டது.டி. இமான் இசையமைத்த பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. குறிப்பாக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ஊதா கலரு ரிப்பன்’ போன்ற பாடல்கள் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தன. ஸ்ரீதிவ்யா, சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்தின் கதைக்களம் சுவாரஸ்யமாக கையாளப்பட்டது.

இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாவது பாகத்திற்கான பணிகளை இயக்குனர் பொன்ராம் துவங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.ஆனால், இந்த இரண்டாம் பாகத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கவில்லை என்பதும், அவருக்கு பதிலாக கவினை ஹீரோவாக நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கவின் தற்பொழுது பல முக்கிய இயக்குனர்களுடன் இணைந்து வருகின்ற நிலையில், இந்தப் படமும் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ போன்று இந்தப் படமும் குடும்ப மகிழ்ச்சியை வழங்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. விரைவில் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

Read more

Local News