Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

சலுகை அளித்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கல்கி படக்குழு! #Kalki

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் கடந்த ஜூன் 27ஆம் தேதி கல்கி 2898 ஏடி திரைப்படம் வெளியானது. அமிதாப் பச்சன், கமல்ஹாசன் போன்ற ஜாம்பவான் நடிகர்களுடன் இன்னும் பல பிரபல நட்சத்திரங்கள் இந்த படத்தில் சிறிதும் பெரிதுமான கதாபாத்திரங்களில் தங்களது பங்களிப்பை அளித்திருந்தனர். சயின்ஸ் பிக்சன் கதையாக உருவாகியிருந்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்த தவறவில்லை. அந்த வகையில் தற்போது வரை கிட்டத்தட்ட 1300 கோடி வரை இந்த படம் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.படம் வெளியாகி ஒரு மாதத்திற்கு மேல் ஆன நிலையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று (ஆக-2) முதல் வரும் ஆக-9ஆம் தேதி வரை இந்த படத்தை இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெறும் 100 ரூபாய் சிறப்பு கட்டணத்தில் கண்டு களிக்கலாம் என தயாரிப்பு நிறுவனம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News