Touring Talkies
100% Cinema

Sunday, August 3, 2025

Touring Talkies

சர்தார் 2 படப்பிடிப்பு தளத்தில் நேர்ந்த துயரம்… அதிர்ச்சியில் படக்குழு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்து 2022ல் வெளியாகி, வரவேற்பை பெற்ற படம் ‛சர்தார்’.வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றியை பெற்றது.இதன் இரண்டாம் பாகம் இதே கூட்டணியில் சமீபத்தில் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது.

சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. நேற்று படத்தின் சண்டைக்காட்சிகளை படமாக்கி வந்தனர். மிகப்பெரிய செட் அமைத்து இரண்டு நாட்களுக்கு முன்பு முதற்கட்ட ஷூட்டிங் தொடங்கியது.

அப்போது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் 20 அடி உயரத்தில் இருந்து சண்டைக் கலைஞர் ஏழுமலை என்பவர் தவறி விழுந்தார். இதில் மார்பு பகுதியில் பலத்த அடிபட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் படக்குழு மட்டுமின்றி அனைவருக்கும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News