நடிகை சாய் பல்லவிக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் தனிப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அவர் நடித்த பிரேமம் படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் கவனம் பெற்றார். சாய் பல்லவியின் சகோதரியான நடிகை பூஜா கண்ணன், தமிழில் வெளியான சித்திரை செவ்வாணம் படத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது சமூக ஊடகங்களில் செயல்படுகிறார்.
இந்த ஆண்டின் ஜனவரி 21ஆம் தேதி வினீத் என்பவருடன் பூஜாவின் நிச்சயதார்த்தம் நடந்தது. தற்போது சாய் பல்லவியின் தங்கை பூஜாவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் சாய் பல்லவி எடுத்துக்கொண்ட புகைப்படங்களும், அவர் நடனமாடிய விடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.