தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘கைதி’ திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியானது. சிறந்த திரைக்கதை மற்றும் அதிரடி காட்சிகளால் இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது என்று கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி நடித்த ‘கைதி’ திரைப்படம் 2019ம் ஆண்டு வெளியானதும், திரையரங்குகளில் வெற்றிகரமான ஓட்டத்தைப் பெற்றது. இப்படத்தில் கார்த்தியுடன் நரேன், அர்ஜுன் தாஸ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். லோகேஷ் கனகராஜ் உருவாக்கிய சினிமாட்டிக் யூனிவர்ஸில் முக்கியமான இடத்தைப் பெற்ற படமாக ‘கைதி’ அமைந்தது. தற்போது இப்படம் வெளியாகி ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
‘கைதி’ திரைப்படம் இந்தியில் ‘போலா’ என்ற பெயரில் மறுபடியும் எடுக்கப்பட்டு வெளியானது. தற்போது மலாய் மொழியிலும் ‘கைதி’ படம் ‘பந்துவான்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. மலாய் ரீமேக் படமான ‘பந்துவான்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆரோன் அஸிஸ் நாயகனாக நடிக்க, கிரோல் அஸ்ரி இப்படத்தை இயக்கியுள்ளார். தமிழில் ‘கைதி’ படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், மலேசியாவின் ஆஸ்ட்ரோ ஷா நிறுவனத்துடன் இணைந்து இந்த ரீமேக் படத்தையும் தயாரித்துள்ளது.
இந்நிலையில், ‘கைதி’ படத்தின் மலாய் ரீமேக் ‘பந்துவான்’ திரைப்படத்தை பார்க்க நடிகர் கார்த்தி மலேசியாவுக்கு சென்றுள்ளார். வரும் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் சிறப்பு திரையிடலை, கதாநாயகன் ஆரோனுடன் சேர்ந்து கார்த்தி பார்த்துள்ளார்.

