Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கூலி படத்தில் ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன்… வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படத்தின் புதிய தகவல்களைப் பற்றி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்ற நிலையில், படம் குறித்த அப்டேட்கள் ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் வெளியாகும், அதிலும் முக்கியமாக படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படும் என படக்குழு அறிவித்தது. இந்த நிலையில், படக்குழு வெளியிடும் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

இன்று, ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியிடப்பட்ட அப்டேட்டில், நடிகை ஸ்ருதிஹாசன் “பீர்த்தி” என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. மேலும், ஸ்ருதிஹாசனுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள போஸ்டரில், அவர் கையில் மம்பட்டி வைத்துக்கொண்டு இருப்பதை காணலாம்.

ஏற்கனவே, படக்குழு தரப்பில் வெளியிடப்பட்ட அப்டேட்களில், மலையாள சினிமாவில் தனது அசாத்திய நடிப்பால் பெரும் பாராட்டுகளைப் பெற்றுவரும் நடிகர் சௌபின் சாஹிர், “கூலி” படத்தில் “தயாள்” என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என படக்குழு தெரிவித்திருந்தது. இது படக்குழு வெளியிட்ட முதல் அப்டேட். அதன் பின்பு, தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நாகார்ஜுனா “கூலி” படத்தில் “சைமன்” என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

Read more

Local News