வேட்டையன்’ படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய தகவல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன.

மலையாள நடிகர் சவுபின் ஷாகிர், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, தமிழ் நடிகை ஸ்ருதிஹாசன், நடிகர் சத்யராஜ் ஆகியோரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. தற்போது, கன்னட நடிகர் உபேந்திராவின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அவர் ‘கூலி’ படத்தில் கலீசா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
