Monday, November 18, 2024

குடும்பத்துடன் கோட் திரைப்படத்தை கண்டுகளித்த நடிகர் விஜய்! #TheGreatestofAllTime

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 68வது திரைப்படமான “கோட்” இன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியானது. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. உலகம் முழுவதும் ஐந்து ஆயிரம் தியேட்டர்களில், மேலும் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை இல்லாதளவு அதிக தியேட்டர்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், விஜயகாந்தின் தோற்றம் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் திரையில் இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில், “கோட்” படத்தை சென்னை அடையாறில் உள்ள தியேட்டரில் தனது குடும்பத்துடன் நேற்று இரவு பார்த்துள்ளார் விஜய் என தகவல் கசிந்துள்ளது. அந்த நேரத்தில் வெங்கட் பிரபு மற்றும் படக் குழுவினரும் அவர்களுடன் படத்தை காண பங்கேற்றனர். படம் முடிந்ததும், விஜய் வெங்கட் பிரபு மற்றும் படக்குழுவினரை வாழ்த்தினார்.

திரைப்பிரபலங்கள் ரசிகர்களுடன் “கோட்” படத்தை ரசித்தனர். நடிகைகள் திரிஷா, கீர்த்தி சுரேஷ், நடிகர்கள் சிவகார்த்திகேயன், வைபவ், இசையமைப்பாளர் யுவன், இயக்குனர் வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் சென்னை, கோவை போன்ற நகரங்களில் உள்ள தியேட்டர்களில் ரசிகர்களுடன் இணைந்து “கோட்” படத்தை ரசித்தனர்.

- Advertisement -

Read more

Local News