பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி. 2014ஆம் ஆண்டு வெளியான ‘புக்லி’ திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் காலடி எடுத்துவைத்தார். அதன் பின்னர், ‘எம்.எஸ். தோனி’, ‘பரத் எனும் நான்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அதிகமான புகழைப் பெற்றார்.


தற்போது, அவர் நடித்துவரும் திரைப்படம் ‘டாக்ஸிக்’. ‘கே.ஜி.எப் 1’ மற்றும் ‘கே.ஜி.எப் 2’ படங்கள் மிகப்பெரிய வெற்றியை கண்டதைத் தொடர்ந்து, நடிகர் யாஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை பிரபல நடிகையுமாகவும், இயக்குநருமாகவும் இருக்கும் கீது மோகன் தாஸ் இயக்குகிறார்.
இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் வெளியாவதற்காகத் தயாராகி வரும் நிலையில், கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உண்மையானால், ‘டாக்ஸிக்’ படம் நடிகை கியாரா அத்வானியின் திரையுலக பயணத்தில் முதல் இருமொழி படமாக அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.