Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கிச்சா சுதீப்பின் ‘பில்லா ரங்கா பாஷா’ படத்தின் கான்செப்ட் வீடியோ வைரல்! #BRB

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்குபவர் நடிகர் கிச்சா சுதீப். ‘நான் ஈ’, ‘புலி’ போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தற்போது, அவர் இயக்குனர் அனுப் பண்டாரியுடன் இணைந்து நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ‘பில்லா ரங்கா பாஷா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை ‘ஹனுமான்’ படத்தின் மூலம் புகழ் பெற்ற பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் கே. நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோர் தயாரிக்கின்றனர். இந்நிலையில், நடிகர் கிச்சா சுதீப் இன்று தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனை சிறப்பாக கொண்டாடும் விதமாக, ‘பில்லா ரங்கா பாஷா’ படத்தின் கான்செப்ட் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ, அவரது ரசிகர்கள் அவரது வரவிருக்கும் படங்கள் குறித்து அப்டேட் கேட்டுக்கொள்வது போல தொடங்குகிறது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ லோகோ மற்றும் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும், இந்த படம் கி.பி 2209-ம் ஆண்டு பின்னணியில் எடுக்கப்படும் என்றும் வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படம் அனைத்து முக்கிய இந்திய மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு விரைவில் வெளியாக உள்ளது.

- Advertisement -

Read more

Local News