இசை அமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி இயல்பாகவே அமைதியான மற்றும் கூச்ச சுபாவம் கொண்டவர். அவர் மெதுவாகவே பேசுவார். மேலும், அவரது மகள் மறைவுக்கு பிறகு அவர் இன்னும் அமைதியாகி விட்டார். அவரது பேச்சிலும் செயல்களிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில், அவர் காலில் செருப்பு அணிவதை தவிர்த்து வருகிறார். இது ஏதாவது வேண்டுதலாக இருக்கலாம் என்று பலர் நினைத்தனர்.ஆனால், அவர் இதற்கு இனி செருப்பு அணியமாட்டேன் என்று கூறியுள்ளார்.ஹைதராபாத்தில் நடைபெற்ற அவரது ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் புரமோஷன் நிகழ்வில் இதுகுறித்து கேட்டபோது, “சில நாட்களுக்கு முன்பு நான் செருப்பு அணியாமல் சுற்றினேன். அந்த அனுபவம் எனக்கு மிகவும் நன்றாக இருந்தது.செருப்பு அணியாமல் இருந்தபோது மனதிற்கு அமைதி கிடைத்தது. ஆரோக்கியத்துக்கும் அது நல்லது.

மேலும், இது நமக்குள் தன்னம்பிக்கையை வளர்க்கிறது. நான் செருப்பில்லாமல் சுற்ற ஆரம்பித்த தருணத்திலிருந்து எந்தவித நெருக்கடிக்கும் ஆளாகவில்லை. வாழ்நாள் முழுவதும் செருப்பு அணியாமல் இருக்க விரும்புகிறேன். இது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது” என்றார்.