Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கார்த்தியின் ஜப்பான் பட இயக்குனருக்கு கை கொடுத்த சசிகுமார் !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘குக்கூ’ படத்தில் இயக்குனராக அறிமுகமானாலும், ‘ஜோக்கர்’ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் புகழ்பெற்றவர் இயக்குனர் ராஜூ முருகன். அந்தப் படம் சிறந்த பிராந்திய மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது.

அதன்பிறகு அவர் இயக்கிய ‘ஜிப்ஸி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் ‘ஜப்பான்’ படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. குறிப்பாக ‘ஜப்பான்’ படமானது கார்த்தியின் மார்க்கெட்டை மிகவும் பாதித்தது. அதிலிருந்து மீள வேண்டும் என்பதற்காக கார்த்தி அடுத்த படங்களுக்குக் காத்திருந்தார். ‘ஜப்பான்’ படத்திற்குப் பிறகு ராஜூ முருகன் சில ஹீரோக்களிடம் கதைகளை சொல்லியிருந்தார், ஆனால் யாரும் சரியான பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் சசிகுமார் அவருக்குக் கை கொடுத்துள்ளார்.

ராஜூ முருகன் இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் அந்தப் படம் தற்போது படப்பிடிப்பில் உள்ளது. ‘ஜிப்ஸி’ படத்தை தயாரித்த திமுக எம்எல்ஏ அம்பேத் குமார் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

Read more

Local News