Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கவினுக்கு வில்லியான நிலையில் நானிக்கும் வில்லியாகும் ஆண்ட்ரியா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கோலிவுட்டில் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் நடிகை ஆன ஆண்ட்ரியா, பின்னணி பாடகி மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகியனிலும் சிறந்து விளங்கி, பல சர்வதேச இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்துள்ளார். தற்போது, பிசாசு 2 உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ள ஆண்ட்ரியா, விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த பிசாசு 2 படம் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. 

தற்போது, கவின் நடிப்பில் விக்ரனன் அசோக் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ஆண்ட்ரியா வில்லியாக நடிக்க உள்ளார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது, மற்றும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. மேலும், பிரபல தெலுங்கு நடிகர் நானியின் நானி 32 படத்திலும் ஆண்ட்ரியா வில்லியாக நடிக்க உள்ளார். சுஜீத் இயக்கும் இந்த ஆக்ஷன் படத்தில், ஆண்ட்ரியா வில்லியாக நடிக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. 

முன்னதாக, வடசென்னை படத்தில் ஆண்ட்ரியா நெகட்டிவ் ஷேடில் மிகச்சிறப்பாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News