Tuesday, November 19, 2024

கவினின் ‘பிளடி பெக்கர்’ திரைப்பட ரிலீஸ் தள்ளிப்போகிறதா ?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் நெல்சன் திலிப்குமார் முக்கியமானவர். இவர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது நெல்சன் தனது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதற்குப் ‘பிலமண்ட் பிக்சர்ஸ்’ என பெயரிட்டுள்ளார்.

அந்த நிறுவனத்தின் முதல் படத்தில் கவின் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘பிளடி பெக்கர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். இதற்குமுன், கவின் நடிப்பில் வெளியான ‘ஸ்டார்’ படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது, இருப்பினும் வசூல் ரீதியாக வெற்றி கண்டது.

இதனைத் தொடர்ந்து, ‘பிளடி பெக்கர்’ படம் அடுத்த மாதம் 2-ந் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிப்பில் வெளியான ‘லால் சலாம்’ போலவே ‘பிளடி பெக்கர்’ படத்திற்கான ஓடிடி உரிமம் விற்கப்படவில்லை. படத்தின் டிஜிட்டல் உரிமையை இன்னும் வியாபாரம் ஆகாத காரணத்தால், ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News