Saturday, September 14, 2024

கவனம் ஈர்த்த கார்த்தியின் மெய்யழகன் பட டீசர்… ஃபீல்குட் படமாக அமையுமா என எதிர்பார்க்கும் ரசிகர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

96 படத்தின் இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் “மெய்யழகன்”. கார்த்தியின் 27-வது படமான இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

“மெய்யழகன்” படத்தில் அரவிந்த்சாமி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர். இந்த படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா, இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார். படத்தின் இசை சில வாரங்களுக்கு முன்பு வெளியானது.

இந்த படத்தில், “நான் போகிறேன்” மற்றும் “யாரோ இவன் யாரோ” எனத் தொடங்கும் இரண்டு பாடல்களை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார். படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. டீசர் காட்சிகளில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி இடையிலான உறவை மையப்படுத்தி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது ஒரு அழகான ஃபீல்குட் படம் என எதிர்பார்க்கப்படுகிறது.திரைப்படம் எவ்வாறு இருக்கும், அதில் எப்படிப்பட்ட கதைக்களம் இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News