Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கல்கி படக்குழுவினர் செய்த புது முயற்சி… என்ன தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கல்கி 2898 ஏடி’ படத்திற்காக தனியாக பிரத்யேகமாக இணையதளம் ஒன்றைத் துவக்கியுள்ளார்கள். அமெரிக்கா, கனடாவில் இப்படம் பல தியேட்டர்களில் வெளியாகிறது. அங்கு நிறைய இடங்களில் படம் வெளியாவதால் எந்த ஊரில், எத்தனை மணி காட்சி நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வசதியாக அந்த இணையதளத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால், அமெரிக்கா, கனடாவில் வசிப்பவர்கள் அந்த இணையதளத்திற்குச் சென்று அவர்களது ஊரில் உள்ள தியேட்டர்களில் எத்தனை மணிக்குக் காட்சி நடைபெறுகிறது என்பதை எளிதில் தெரிந்து கொண்டு முன்பதிவு செய்ய முடியும்.திரையுலகில் ஒரு படத்திற்கென தனியாக இணையதளம் ஒன்றை ஆரம்பித்திருப்பது இதுவே புதிது என்கிறார்கள்.

- Advertisement -

Read more

Local News