Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கடும் காய்ச்சலை கூட பொருட்படுத்தாமல் தக் லைஃப் படத்தின் முக்கியமான காட்சிகளை நடித்துக்கொடுத்த நடிகர் சிம்பு! #THUG LIFE

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில், கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் படம் ‘தக் லைப்’. இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில், சிம்பு சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகள் சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட அரங்கில் படமாக்கப்பட்டுள்ளன. இந்த சண்டைக் காட்சிகளை தேசிய விருது பெற்ற ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் நடத்தியுள்ளனர்.

காலை முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து இரண்டு நாட்கள் சிம்பு அந்தக் காட்சிகளில் நடித்துள்ளார். அந்த நாட்களில் சிம்புக்கு கடும் காய்ச்சல் இருந்தபோதும், படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டும் என்பதால் உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் நடித்துக் கொடுத்துள்ளார்.

‘விக்ரம்’ படத்தில் கமல்ஹாசன் நடித்த இடைவேளைக் காட்சி சண்டையில் பயன்படுத்தப்பட்ட ‘மோகோபாட்’ ரோபோட்டிக் கேமரா கொண்டு அந்தக் காட்சியை படமாக்கியுள்ளனர் என்பது கூடுதல் தகவல். இப்படத்தில் உள்ள முக்கியமான சண்டைக் காட்சிகளில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்கின்றனர்.

- Advertisement -

Read more

Local News