Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கங்குவா படத்தின் இரண்டாம் பாகத்தோடு யாருமே போட்டி போட முடியாது… யார் சொன்னது தெரியுமா? #Kanguva

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார். சூர்யாவின் காரியரிலேயே கங்குவா படத்துக்கான பட்ஜெட்ட்தான் அதிகம். மேலும் சிவா சூர்யாவை வைத்து அற்புதம் செய்வாரா அல்லது சரித்திரம் படைப்பாரா என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். ஏனெனில் சிவா கடைசியாக இயக்கிய அண்ணாத்த படம் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. கங்குவா இதுவரை 400 கோடி ரூபாய்க்கும் மேல் பிஸ்னெஸ் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுவும் சூர்யாவின் கரியரில் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கங்குவா திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இரண்டு பாகங்களுக்கான படப்பிடிப்பையும் சிவா முடித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகம் கண்டிப்பாக மெகா ஹிட்டாகும்; எனவே இரண்டாம் பாகத்தையும் அதற்கு பிறகு வெளியிட்டால் வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படம் அக்டோபர் மாதம் ரிலீஸாகவிருக்கிறது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில் அளித்த பேட்டியில், “கங்குவா படத்தின் முதல் பாகத்தோடு யார் வேண்டுமானாலும் போட்டி போடலாம். ஆனால் கங்குவா படத்தின் இரண்டாம் பாகத்தோடு யாருமே போட்டி போட முடியாது என்பதில் 100 சதவீதம் நம்பிக்கையோடு இருக்கிறேன்” என்று கூறியுள்ளார். இது ரசிகர்களிடையே ஒருபக்கம் மகிழ்ச்சியையும் மறுபக்கம் “ஹைப் ஏத்தி எதாவது சொதப்பிடாதீங்க” என மற்றொரு புறம் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News