தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படம் திரைக்கு வந்ததை அடுத்து புதுமுகங்களை வைத்து அவர் இயக்கி வரும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் அடுத்தகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைத்திருக்கும் ஜி.வி. பிரகாஷ் குமார், அப்படம் குறித்த ஒரு அறிவிப்பை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகிறது. இந்த பாடலை தனுஷ் பின்னணி பாடி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதேபோல், விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் தங்கலான். ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வரும் இந்த படத்திற்கும் ஜி.வி. பிரகாஷ் குமாரே இசையமைத்துள்ளார். இந்த படத்தின் அடுத்த சிங்கிள் பாடலும் விரைவில் வெளியாக இருப்பதாக இன்னொரு பதிவும் போட்டுள்ளார் ஜி.வி. பிரகாஷ்.