நடிகர் அஜித் குமார் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். குட் பேட் அக்லி திரைப்படத்தை மார்க் ஆண்டனி புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இப்படத்தில் மூன்று வேடங்களில் அஜித் நடித்துள்ளார். இதுவரை நாம் பாத்திராத கதாபாத்திரத்தில் லுக்கில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் காட்சியளிக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில். படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்குகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படப்பிடிப்பில் சண்டை காட்சியை படமாக்கவுள்ளனர். ஐதராபாத்தில் படப்பிடிப்பு பணி 10 நாட்கள் நடைப்பெறவுள்ளது. மறுப்பக்கம் விடாமுயற்சியின் படப்பிடிப்பும் ஐதராபாத்தில் இன்று தொடங்குகிறது. திரிஷா மற்றும் அர்ஜூன் இடையே காட்சிகள் படமாக்கப்படவுள்ளது. இந்த ஸ்கெடியுளில் சண்டை காட்சியை படமாக்கவுள்ளனர். ஐதராபாத்தில் படப்பிடிப்பு பணி 10 நாட்கள் நடைப்பெறவுள்ளது. மறுப்பக்கம் விடாமுயற்சியின் படப்பிடிப்பும் ஐதராபாத்தில் இன்று தொடங்குகிறது. திரிஷா மற்றும் அர்ஜூன் இடையே காட்சிகள் படமாக்கப்படவுள்ளது.
குட் பேட் அக்லி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஸ்பெயினில் காட்சி படுத்தப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் ஒரே சமயத்தில் இரண்டு படங்கள் அடுத்தடுத்து நடிக்கிறார். இதனால் இரண்டு படங்களுமே சொன்ன தேதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.