ரசிகர்களால் நேஷனல் க்ரஷ் என்று அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் வெளியான புஷ்பா 2 படத்தில் நடித்தார். இப்படம் உலகளவில் இதுவரை ₹1500 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும் நடிப்பதன் மூலம் மிகவும் பிஸியாக உள்ள ராஷ்மிகா, சல்மான் கானுடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
அதே நேரத்தில், ராஷ்மிகா நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது. புஷ்பா 2 படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், “நான் யாரை காதலிக்கிறேன் என்று உங்களுக்கு தெரிந்துதானே இருக்கும் என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார். மேலும், விஜய் தேவரகொண்டாவின் குடும்பத்துடன் சேர்ந்து அவர் புஷ்பா 2 படத்தை பார்த்ததாக தகவல்கள் கூறப்படுகின்றன.
சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில், ராஷ்மிகா தனது உறவுகளின் மீதான எண்ணங்களை பகிர்ந்து கொண்டு, ஒரு உறவில் நான் மிக முக்கியமாகக் கருதுவது மரியாதைதான். ஒருவருக்கொருவர் மதிப்புடன் நடந்து கொண்டால் உறவு வலுவாகும். அதேபோல் உங்கள் நண்பரிடம் நேர்மையாகவும், கவனத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். இந்த குணங்கள் உள்ள ஒருவருடன் மட்டுமே நான் தொடர்பு கொள்வேன். இவை இல்லாதவர்களுடன் எனக்கு அன்பு இருக்காது என தெளிவாக கூறினார்.