Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கும் ‘தீவினை போற்று ‘ வெப் சீரிஸ்… முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் முண்ணனி பிரபலங்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஐஸ்வர்யா லட்சுமி மலையாள சினிமாவில் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கினாலும், தமிழிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம், விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த கட்டா குஸ்தி, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்களில் நடித்து, இவர் தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார்.

மேலும், அவர் தெலுங்கு திரைப்படங்களிலும் பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கிங் ஆப் கொத்தா மற்றும் அசோக்செல்வன் நடிப்பில் வெளியான பொன் ஒன்று கண்டேன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். அடுத்ததாக, கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைப் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதே சமயம், ஐஸ்வர்யா லட்சுமி ஒரு புதிய வெப் தொடரிலும் நடித்து வருகிறார். இதனை அறிமுக இயக்குநர் மோசு என்பவர் இயக்குகிறார். இவர் இயக்குனர் பா. ரஞ்சித்தின் உதவியாளராக பணியாற்றியவர். இந்த வெப் தொடரின் பெயர் ‘தீவினை போற்று’ என வைக்கப்பட்டுள்ளது. இந்த தொடரின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கி 40 நாட்கள் நடந்தது. தற்போது, அடுத்தகட்ட படப்பிடிப்பு பணிகள் பொள்ளாச்சியில் நடைபெற்று வருகின்றன.

இந்த தொடர் 1990-களின் பின்னணியில் அமைந்த ஒரு கதைக்களத்தை கொண்டு உருவாகியுள்ளது. யாழி பிலிம்ஸ் நிறுவனம் இதனைத் தயாரிக்கிறது. இதில் ஐஸ்வர்யா லட்சுமியுடன் இணைந்து சத்யராஜ், பாரதிராஜா, மற்றும் பாபு ஆண்டனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘தீவினை போற்று’ வெப் தொடர் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News