Friday, April 12, 2024

ஏ.ஆர்.முகதாஸ்-ன் சிக்கந்தர்!‌ ரசிகர்களுக்கு ராம்ஜான் விருந்து படைத்த சல்மான் கான்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாப்பட்ட நிலையில் ராம்ஜான் பண்டிகை அன்று தன் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக தனது புதிய படத்தின் டைட்டிலை அறிவித்திருக்கிறார் சல்மான்கான் அவர் நடிக்கும் படத்தின் பெயர் சிக்கந்தர். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளரான சஜித்நதியத்வாலா தயாரிக்கிறார்.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அஜித் நடித்த தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி விஜயகாந்தின் ரமணா, சூர்யாவை வைத்து கஜினி, ஏழாம் அறிவு விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி மற்றும் சர்க்கார் மகேஷ் பாபுக்கு ஸ்பைடர் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தர்பார்‌ என பல டாப் நடிகர்களுக்கு படங்களை இயக்கியுள்ளார்.

அவர் தமிழில் சூர்யாவை வைத்து இயக்கிய கஜினி படத்தை பாலிவுட்டில் அமீர்கானை வைத்து இயக்கி மாபெரும் வெற்றி பெற்றார். அதைதொடர்ந்து தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி வைத்து ஸ்டாலின் என்ற படத்தை இயக்கிய அவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவையும் வைத்து தர்பார் படத்தை இயக்கி இருந்தார் ஆனால் ஏனோ இப்படம் சரியான வரவேற்பைப் பெறவில்லை.

சினிமாவில் இருந்து சில காலம் ஒதுங்கி இருந்த இந்நிலையில் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயனின் SK23 படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது அடுத்த புதிய படத்தின் டைட்டிலை அப்டேட்-டை வெளியிட்டார்.அவர் இயக்கும் இப்படத்திற்கு சிக்கந்தர் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.அதில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் புராணக் கதையை மையமாக கொண்டு இப்படத்தை இயக்கவுள்ள நிலையில் சிக்கந்தர் படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகளை கடந்த சில மாதங்களாக முன்னர் முடித்தார் ஏ. ஆர். முருகதாஸ்.இதைதொடர்ந்து SK23 படத்தை விரைவில் முடித்துவிட்டு சிக்கந்தர் படத்துக்கான சூட்டிங்கை விரைவில் தொடங்க உள்ளார்.

- Advertisement -

Read more

Local News