Friday, April 26, 2024

தள்ளி போன கல்கி 2898-ஏடி! காத்திருப்பில் ரசிகர்கள்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மிகவும் பிரமாண்டமாக இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் கல்கி 2898-ஏடி. இந்த படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார் இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.பான் இந்தியா படமாக வெளிவரவுள்ள இந்த திரைப்படம் திரையுலகில் பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.

இத்திரைப்படத்தில் அமிதாப் பச்சன், உலகநாயகன் கமல், திஷா பதானி மற்றும் பசுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கும் நிலையில் சந்தோஷ் நாராயணன் இப்படத்தினாகன இசையை அமைக்கிறார்.வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

செயின் ஃபிக்சன் திரைக்கதையாக இப்படம் தயாராகிறது.இதற்கு முன்னர் ‘கல்கி 2898- ஏடி’ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி பலரையும் ஈர்த்தது.அதேபோல் ஒரு புதிய வடிவிலான துப்பாக்கியை படக்குழு வடிவமைப்பது குறித்தும் அதன் தயாரிப்பு குறித்த வீடியோவும் வெளியாகி பெரிதும் கவர்ந்தது.

வருகின்ற மே 9ல் இப்படம் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் ஆனால் ஆந்திர மாநிலத்தில் தேர்தல் நடைப்பெற உள்ளதால் ரிலீஸ் தேதி தள்ளி போய் படம் வெளிவர தாமதமாகி ஆகியுள்ளது.அதே சமயம் பெரும் காத்திருப்பை ஏற்படுத்தியுள்ள கல்கி 2898-ஏடி படத்தின் அதிகாரபூர்வ வெளியீட்டு தேதி வரும் ஏப்ரல் 17-ம் தேதி அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News