Friday, April 12, 2024

துப்பு துலக்க நடிகர்களை தேடும் விஷால்…மீண்டு எழும் துப்பறிவாளன் 2 !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகி வெற்றிப்பெற்ற படம் விஷால் நடித்த துப்பறிவாளன். வித்தியாசமான பாணியில் திரைக்கதை அமைக்கும் திறமை கொண்டவர் இயக்குனர் மிஷ்கின்.அதே போல் இப்படமும் ரசிகர்களை ஈர்த்து வெற்றிப்பெற்றது.

தற்போது நடிகர் விஷால் நடித்து இயக்குனர் ஹரி இயக்கியுள்ள ரத்னம் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதில் பிரியா பவானி சங்கர் நாயகியாகவும், காமெடி ரோலில் யோகிபாபு, சமுத்திரகனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.வரும் 26-ம் தேதி ரத்னம் படம் வெளியாகிறது.

ஆக்ஷன் த்ரில்லர் சஸ்பென்ஸ் என்ற வரிசையில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் விஷால்.சில படங்கள் வெற்றி சில படங்கள் தோல்வி என மாறி மாறி சந்தித்து கொண்டு இருக்கும் விஷால் தற்போது படப்பிடிப்பு பாதியிலேயே நின்றுபோன துப்பறிவாளன் 2 படத்தை கையில் எடுத்து இருக்கிறார்.

முன்னதாக லண்டனில் தொடங்கப்பட்ட துப்பறிவாளன் 2 படப்பிடிப்பின் போது இயக்குனர் மிஷ்கின் மற்றும் விஷால் இடையே பிரச்சினை ஏற்பட்டு மோதல் உண்டானது.அதனால் படப்பிடிப்பும் நின்றுபோனது.இதனால் துப்பறிவாளன் 2 படத்தை அவரே இயக்கி நடிக்க போகிறார் விஷால்.

இதற்கான பணிகளைத் மும்முரமாக ஆரம்பித்துள்ள விஷால் அஜர்பைஜான், மால்டா போன்ற பகுதிகளுக்கு லொகேஷன் பார்க்க சென்றுவந்தார். முதல் பாகத்தில் நடித்த பிரசன்னா உள்ளிட்ட சிலரும் இப்படத்திலும் நடிக்கின்றனர்.துப்பறிவாளன் 2 படத்துக்காக நடிகர் விஷாலே, நேரடியாக ஆடிஷன் செய்து துணை கதாபாத்திரங்களுக்கான நடிகர்களைத் தேர்வு செய்து வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News