Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

எல்.சி.யு-ல் இணைகிறாரா நடிகர் மம்மூட்டி? தீயாய் பரவும் தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் மம்முட்டி, ஜோதிகா நடித்த ‘காதல் தி கோர்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இப்படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்கினார். முன்பே நடந்த இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் நடிப்பீர்களா? என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த மம்முட்டி, “படக்குழு என்னை இதுவரை அணுகவில்லை. ஆனால், எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகலாம், மேலும் எல்.சி.யுவிற்கான கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார். மம்முட்டியின் இந்த பேச்சு அடங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் பின்னர், வரவிருக்கும் எல்.சி.யு படங்களில் மம்முட்டி நடிப்பாரா என்பதைக் காத்திருந்து காணலாம்.

சமீபத்தில், ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் ‘பென்ஸ்’ திரைப்படம் எல்.சி.யுவில் இணைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News