Tuesday, November 19, 2024

எப்போதும் அவர் மீது அன்பும், மரியாதையும் மட்டுமே இருக்கும்… தங்கலான் படப்பிடிப்பில் விக்ரமுடன் நடித்தது குறித்து மாளவிகா மோகனன் டாக்! #Thangalaan

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபலமான ஈரான் இயக்குநர் மஜித் மஜித்தின் இயக்கத்தில் 2017இல் வெளியான பியாண்ட் தி கிளவுட்ஸ் எனும் படத்தில் மாளவிகா அறிமுகமானார்.தமிழில் நடிகர் ரஜினியின் பேட்ட, விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தற்போது, பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அடிக்கடி எக்ஸ் தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு மாளவிகா மோகனன் பதிலளிப்பார்.இந்த நிலையில், ரசிகர் ஒருவர் நடிகர் விக்ரமை முதன் முதலாக சந்தித்தது மற்றும் அவருடன் தங்கலான் படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து கேள்வியெழுப்பினார்.

அதற்கு மாளவிகா, நடிகர் விக்ரமை முதலில் சந்தித்தபோது அவரை க்ளோஸாக ஆக வாட்ச் செய்தேன். ஹாஹஹா.. தங்கலான் படப்பிடிப்பில் சண்டைக்காட்சிகளில் அவருடன் நடித்தபோது நான் செய்த முட்டாள்தனங்களால் சங்கடமாக உணர்ந்தேன். அதுதான், என் முதல் சண்டை படம். ஆனால், அவர் எனக்கு ஆதரவாக இருந்தார் இல்லாத இந்தப் பயணத்தை கற்பனைகூட ய முடியவில்லை. என்னவொரு மனிதர். எப்போதும் அவர் மீது அன்பும், மரியாதையும் மட்டுமே இருக்கும் எனப் பதிலளித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News