நடிகை ராஷ்மிகா மந்தனா, சந்தோஷமாக வாழ சில முறைகளைப் பின்பற்றுவதாக கூறுகிறார். அவர் கூறும் தொழில்நுட்பங்களைக் கடைபிடித்து, அவரைப் போல் அழகாகவும் ஆரோக்கியமாகவும் வாழ முடியும்.நல்ல உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது முக்கியம், ஆரோக்கியமான மற்றும் தூய்மையான உணவு தேவையானது. அதிக இனிப்பு சாப்பிடுவதால் உடல்நலக் குறைபாடுகள் ஏற்படலாம். சிலர், “காலை எழுந்தவுடன் காபி குடிப்பது நல்லதல்ல” என்று சொல்வார்கள். ஆனால் கொஞ்சம் அளவு காபி குடிப்பது உற்சாகத்தை அளிக்கும்.
பயணம் செய்யும் வாய்ப்புகள் வந்தவுடன் அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். புத்தகங்கள் படிப்பது ஒரு நல்ல பழக்கம். உடலுக்கு தேவையான அளவு தூக்கம் அவசியம். மனம் விரும்பாத துறையில் பணியாற்றி தினமும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, மனதுக்கு பிடித்த பணியைத் தேர்ந்தெடுத்து செய்யுங்கள்.
மனமகிழச்சியாக சிரிக்கவும். சிலர் வாழ்க்கையில் சிரிப்பதை மறந்து எப்போதும் முகத்தை சுளித்து வைத்திருப்பார்கள்; அது போல செய்யாதீர்கள். விலங்குகளோடு ஆடுவதால் உள்ளுள்ள அழுத்தம், சோர்வு அனைத்தும் அகலும். எனக்குப் பிடித்தது எனது அவுரா நாய்க்குட்டியுடன் விளையாடுவதால் கிடைக்கும் மகிழ்ச்சி என டிப்ஸ் கொடுத்துள்ளார்.