நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டவர்களின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள தங்கலான் படம் இன்னும் பத்து தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. மிகவும் பிரம்மாண்டமான வெளியீடாக ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி இன்று சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000050293.jpg)
ஜி.வி. பிரகாஷ், விக்ரம், பார்வதி, பசுபதி ஆகியோரை நன்றி தெரிவித்த பா. ரஞ்சித், அவரது உதவி இயக்குனர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார். பா. ரஞ்சித் மிகப்பெரிய ஆர்மியை தன்னுடைய பின்னால் வைத்துள்ளார் என்று மாளவிகா குறிப்பிட்டுள்ளார். மேலும், படத்தில் அதிகப்படியான ஆக்ஷன் காட்சிகளை மேற்கொண்ட நிலையில், இந்த மேடையில் அவர் மீண்டும் சண்டையிட வேண்டும் என்றால் யாரிடம் சண்டையிடுவீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மாளவிகா மோகனன், தன்னுடைய ஆக்ஷன் பார்ட்னர் என்றால் அது தங்கலான் தான் என்று கூறினார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000051119-683x1024.jpg)
அதனால் நடிகர் விக்ரமுடன் தான் மீண்டும் சண்டையிட விரும்புவதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து அவர் மேடையில் நடிகை பார்வதிக்கு சிலம்பம் சுற்ற கற்றுக் கொடுத்ததுடன் இருவரும் அடுத்தடுத்து மேடையிலேயே சிலம்பம் சுற்றியதை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் தெரிவித்தனர். இவ்வாறாக இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது. முன்னதாக, தங்கலான் படத்தை போல தான் மிக அதிகமாக இதுவரை எந்தப் படத்திற்காகவும் கஷ்டப்படவில்லை என்றும் மாளவிகா மோகனன் எமோஷனலாக குறிப்பிட்டார்.