ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், விஜய், அஜித் ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை உருவாக்கியவர் கே.எஸ். ரவிக்குமார். சமீபத்தில், அவர் படங்களை தயாரிப்பதிலும், நடிப்பதிலும் தன்னை வெளிப்படுத்தி வருகிறார்.

1990-ம் ஆண்டில் வெளியான ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கே.எஸ். ரவிக்குமார், அதன் பின்னர் சேரன் பாண்டியன், புத்தம் புதுப்பயணம், ஊர் மரியாதை, பொண்டாட்டி ராஜ்யம், புருஷ லட்சணம், நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, பிஸ்தா, நட்புக்காக, படையப்பா, மின்சார கண்ணா, தெனாலி, பஞ்சதந்திரம், வில்லன், வரலாறு, தசாவதாரம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

‘நாட்டாமை’ படத்தில் விஜயகுமார் நடித்த வேடத்தில் முதலில் சிவாஜி நடிக்க வேண்டும், அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அந்த படத்தில் விஜயகுமார் நடித்ததாக சமீபத்திய பேட்டியில் கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த ‘படையப்பா’ படத்தில் சிவாஜி கணேஷனை நடிக்க வைத்தவர் கே.எஸ். ரவிக்குமார்.

‘நாட்டாமை’ படத்தில் குஷ்பூ நடித்த முதிய கதாபாத்திரத்தில் முதலில் லட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் ஒரு சூட்டிங் போது குஷ்பு நடிக்கும்போது, ‘நாட்டாமை’ படத்தில் நான் நடிக்கிறேனே என்று கூறியதால், அவர் அந்த கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்று கே.எஸ். ரவிக்குமார் கூறியுள்ளார்.