Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

உலகமெங்கும் டிசம்பர் 20ல் வெளியாகிறது விடுதலை திரைப்படம்… அதிகாரபூர்வ அறிவிப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான “விடுதலை” திரைப்படத்தின் முதல் பாகத்தில் நடிகர் சூரி முக்கிய கதாபாத்திரத்தில், மற்றும் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வர்த்தக ரீதியாக வெற்றி பெற்ற படம் எனப்படும்.

இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான மீதமுள்ள காட்சிகளின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதியின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக நடிகை மஞ்சு வாரியர் நடிப்பதாகவும், இருவருக்குமான காட்சிகள் 1960களில் நடப்பதாக காட்சியளிக்கப்பட இருப்பதால், அவர்களின் தோற்றங்களை இளமையாக காட்ட டிஏஜிங் தொழில்நுட்பத்தை வெற்றிமாறன் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், நடிகர் எஸ்.ஜே.சூர்யா “விடுதலை” பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, இப்படம் உலகமெங்கும் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News