Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

உலகநாயகன் இனி அடுத்த 2 வருஷத்துக்கு ரொம்ப பிஸி… கையில் இத்தனை படங்களா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அரசியலில் இருந்து சிறு இடைவேளைக்கு பிறகு, கமல் தற்போது படங்களில் முழு கவனம் செலுத்துகிறார். விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த 4 படங்கள் கமல் நடிப்பில் வெளிவர உள்ளது. மேலும் நான்கு படங்களில் கமிட்டாகி இருக்கிறார்.இந்தியன் 2 படம் ஜூலை 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

அதே போல கமல்ஹாசன் கல்கி படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்கிறார். படம் ஜூன் 27ஆம் தேதி ரிலீசாகிறது. கமல் இப்படத்தில் நடிக்க 20 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.தக் லைஃப் படத்தின் மூலம் 38 வருடத்திற்கு பிறகு மணிரத்தினத்துடன் மீண்டும் இணைந்துள்ளார் கமல். இப்படம் 2024 அக்டோபர் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்தியன் 3 படம் 2025 ஜனவரியில் வெளிவருகிறது. இந்தியன் படத்தை இரண்டாம் பாகத்துடன் மூன்றாம் பாகத்தையும் முடித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தேவர் மகன் 2, பாபநாசம் 2 போன்ற படங்களும் கமலின் லைனப்பில் உள்ளது. தக் லைஃப் முடிந்தவுடன் பாபநாசம் 2 படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.மேலும் எச் வினோத்திடம் நல்ல கதையை கொண்டு வரும்படி பேசியுள்ளார் எனவும் இவருடனும் கமல் இனைய வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News