தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்றாலே ஷங்கர் அவர்களே நமக்கு நினைவுக்கு வருவார். அவருடைய கதைகள் மிக நேர்த்தியாகவும், பிரம்மாண்டமாகவும் எடுத்துரைக்கப்பட்டிருக்கும். தற்போது அவர் இயக்கியுள்ள “இந்தியன் 2” திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது.
இந்தியன் படத்தின் முதல் பாகம் 1996ஆம் ஆண்டு வெளியானது, 28 ஆண்டுகள் கழித்து “இந்தியன் 2” வெளியாகவுள்ளது. திரைப்படம் வரும் ஜூலை 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தியன் 2 திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் பல நகரங்களில் படக்குழுவினர் சென்று ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் ஒரு பகுதியாக, வாஷிங்டனில் உள்ள ஆடம்ஸ் மலையில் கடும் பனிகள் அடர்ந்த இடத்தில் போஸ்டர் வைத்து, படக்குழு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பெரிதும் பகிரப்பட்டு வருவதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.