பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதன் பின்னர், தனுஷ் நடித்த கர்ணன் படத்தை இயக்கினார். தற்போது, துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் படத்தை இயக்கி வரும் அவர், அடுத்ததாக மீண்டும் தனுஷ் நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்கப் போகிறார்.

மாரி செல்வராஜ், 1970-களில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதையை இயக்கத் திட்டமிட்டுள்ளார். அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் தோற்றத்திலேயே இந்த படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் வடிவமைக்கப்பட உள்ளன.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி திரைப்படம் 1965-களில் வாழ்த்த மொழிப்போர் தியாகியின் வாழ்க்கை வரலாற்றைக் கருவாகக் கொண்டு உருவாகி வருகிறது. அதே நேரத்தில், தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படம் 1970-களில் நிகழ்ந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையாக உருவாக உள்ளது.