Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

இயக்குனர் விஷ்ணுவர்தனின் நேசிப்பாயா படத்தின் டீசர் தேதி வெளியீடு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பில்லா படத்தின் இயக்குநர் விஷ்ணு வரதன் இயக்கத்தில், ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடிக்கும் ‘நேசிப்பாயா’ படத்தின் டீசர் வெளியாகும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த பிரபல நடிகர் முரளியின் இளைய மகனும் நடிகர் அகர்வாலின் சகோதரருமான ஆகாஷ் முரளி அறிமுகமாகும் இப்படத்தை விஷ்ணு வரதன் இயக்கி வருகிறார். ‘நேசிப்பாயா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் அதிதி ஷங்கர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படம் காதலை மையமாகக் கொண்டு உருவாகி வரும் நிலையில், இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா பணியாற்றுகிறார். இதன் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், டீசர் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News