மிராக்கிள், பயோபிக் ஆப் பிலிம் இன்டஸ்ட்ரி’ ஆகிய படங்களில் நடித்தவர் சுமன் ராணா. தற்போது ‘லெட்ஸ் மீட்’ எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் சுமன் ராணாவுக்கு ஜோடியாக தனுஜ் விர்வானி நாயகனாக நடித்துள்ளார். இந்தகால சமூக ஊடக காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் வரும் பிப்ரவரி 7ம் தேதி வெளியாகிறது.இப்படம் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சுமன் ராணா, இனிவரும் காலங்களில் தொடர்ந்து படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடிக்க விரும்புகிறேன். நல்ல கதாபாத்திரம் கிடைக்கும்போதெல்லாம் அதில் நடிப்பேன். ஆனால், டிவி சீரியல்களில் எப்போதும் நடிக்க மாட்டேன். ஏனெனில், சீரியல்களில் நடித்தால் காலை முதல் மாலை வரை தொடர்ந்து நடிக்க வேண்டும். ஓய்வு கிடைக்காது, சீரியல் முடியும் வரை ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் தான் தொடர முடியும். அதுவே, படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்றால் புதிது புதிதான கதாபாத்திரத்தில் நடிக்க முடியும்” என்றார்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more