தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி. அவருக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.இந்த சூழலில், நடிகர் சிரஞ்சீவி “பிரஜா ராஜியம்” என்ற தனது அரசியல் கட்சியை உருவாக்கினார். திரையுலகில் மெகா ஸ்டாராக பிரபலமான அவர், அரசியலில் சாதிக்க முடியவில்லை.இதன் காரணமாக, தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துவிட்டு, எம்.பி. பதவியில் இருந்தார். அதன்பிறகு, நடிகர் சிரஞ்சீவி அரசியலில் இருந்து முழுமையாக விலகி இருந்தார்.

இந்நிலையில், நேற்று “பிரம்மானந்தம்” என்ற திரைப்படத்தின் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிரஞ்சீவி கலந்துகொண்டார்.

ஒரு திரைப்படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ, அதே அளவில் அதன் வெளியீட்டு விழாவும் முக்கியமானதாக இருக்கிறது. இப்படிப்பட்ட விழாக்கள் திரைப்படத்தை ரசிகர்களிடம் விரைவாக கொண்டு செல்ல உதவுகின்றன.”நான் அரசியலுக்கு திரும்புவேன் என்று சிலர் எண்ணுகின்றனர். ஆனால், என் முழு வாழ்நாளையும் திரையுலகுக்காகவே அர்ப்பணிக்க முடிவு செய்துள்ளேன். மீண்டும் அரசியலில் நுழைய எண்ணம் இல்லை. திரையுலகச் சேவைகளுக்காக மட்டுமே அரசியல் கட்சித் தலைவர்களை சந்திப்பேன் என்று நடிகர் சிரஞ்சீவி கூறினார்.