Tuesday, November 19, 2024

இனியும் திருந்தலைன்னா, நான் முட்டாள்… பப்லு பிருத்விராஜ் பரபரப்பு பேட்டி…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல நடிகரான பப்லு பிருத்விராஜ், இண்டஸ்ட்ரீயிலும் சின்னத்திரையிலும் நீண்டகாலமாக பணியாற்றி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு, அவர் ஷீத்தல் என்ற பெண்ணுடன் உறவில் இருந்தார். அவர்கள் இருவரும் பல பேட்டிகளில் ஒன்றாக பங்கேற்றனர். ஆனால், திடீரென அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர்.

இதுகுறித்து அண்மையில் நடைபெற்ற பேட்டியில் பப்லு பிருத்விராஜ், “நான் எப்போதும் வெளிப்படையாக இருப்பேன். நீங்க என்ன கிண்டல் பண்ணுவீங்கன்னு நினைச்சாலும், நான் உண்மையைச் சொல்ல தயங்கல. நான் ஒரு விஷயத்தைச் சொன்னா, ஒரு பத்து பேர் நல்ல விதமா எடுத்துக்கொள்றாங்க, இன்னொரு பத்து பேர் என்னைக் கழுவி ஊத்துவாங்க. அதனால எனக்கும் ஷீத்தலுக்கும் இருக்கும் பிரச்னையை வெளிப்படையாக பேச விரும்பல.

நான் நிறைய முறை ஏமாந்துட்டேன். இப்போ நான் சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கேன். இனி என்னை மட்டுமே கவனிக்கப் போறேன். இனியும் திருந்தலைன்னா, நான் முட்டாள்’ என்று வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News