ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. ரஜினியின் 170வது படமாக இருக்கும் இதனை லைகா நிறுவனம் தயாரித்து, அனிருத் இசையமைத்துள்ளார். அக்டோபர் 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நகரில் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது, வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், சினிமாவில் அவர் ஆரம்ப காலங்களில் எவ்வளவு கஷ்டங்களை சந்தித்தார் என்பதையும், அதன் பிறகு தான் முக்கிய இடத்தை அடைந்தார் என்பதையும் ரஜினி குறிப்பிட்டார்.
இந்த நிலையில், அமிதாப்பச்சன் சமீபத்தில் ரஜினியை பாராட்டி வெளியிட்ட வீடியோவில், ஹிந்தியில் ‘ஹம்’ என்ற படத்தில் ரஜினி எனது தம்பியாக நடித்தார். அந்த படப்பிடிப்பு நடைபெறும் நேரங்களில், செட்டில் தரையிலேயே படுப்பார். அவரின் எளிமை என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. இந்த குணத்தால் தான் அவர் இன்று வரை சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார், என்று கூறியுள்ளார்.