Touring Talkies
100% Cinema

Monday, March 10, 2025

Touring Talkies

இந்தியாவில் முதல்முறையாக பிரபு தேவா நடத்தும் பிரம்மாண்ட நிகழ்ச்சி… வெளியான சூப்பர் அறிவிப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் பிரபுதேவாவின், பிரம்மாண்டமான நடன நிகழ்ச்சி, இந்தியாவில் முதல் முறையாக நடக்கவுள்ளது. மிக பிரபல நிறுவனமனா அருண் ஈவண்ட்ஸ் அருண் நடத்த V.M.R.ரமேஷ், திரு.G Star. உமாபதி மற்றும் ஜெய்சங்கர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

இந்த நடன நிகழ்ச்சி 2025 பிப்ரவரி 22ஆம் தேதி சென்னையில் நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடிகரும் இயக்குனருமான ஹரிகுமார் இந்த பிரம்மாண்டமான ஷோவை இயக்குகிறார்.ஆர்ட் டைரக்டர் கிரண் கைவண்ணத்தில் பல்வேறு விதமான செட்டுகள் அமைக்கப்பட உள்ளது.இந்நிகழ்ச்சிக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் டிக்கெட்களை அறிமுகப்படுத்தும் விழா, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.முன்னதாக iBa ( ஐபா) நிறுவனத்தின் ticket iBa என்ற இணையதளத்தை பிரபுதேவா துவக்கிவைத்து முதல் 25000 டிக்கெட்டுகளை iBa நிறுவனத்தின் திட்ட இயக்குனர் திரு.P.K அபி மன்னனிடம் வழங்கினார்.

இந்நிகழ்வினில் நடிகர் நடன கலைஞர் பிரபுதேவா பேசியபோது, இது மிக இனிமையான தருணம். அருண் ஈவண்ட்ஸ்க்கு என் முதல் நன்றி. நான் இப்படி ஒரு நிகழ்ச்சியை நினைத்துக் கூட பார்த்ததில்லை, அருண் ஈவண்ட்ஸ் முயற்சிதான். ஹரி இதற்கு ஒரு பேக்போனாக இருந்தார். இனி எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் தான். நீங்கள் சினிமா போல எதிர்பார்ப்பீர்கள். சினிமாவில் கட் பண்னி, கட் பண்ணி ஆடுவோம். இதில் அப்படி முடியாது தொடர்ந்து ஆட வேண்டும். அதற்காக தொடர்ந்து ரிகர்சல் செய்து வருகிறேன். உங்களை மகிழ்விக்க வேண்டும். அதற்காக 200 சதவீத உழைப்பை போட்டு வருகிறேன். கண்டிப்பாக உங்களை இந்த நிகழ்வு ஆச்சரியப்படுத்தும் எல்லோருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News