Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

இந்தியன் 3 படப்பிடிப்பை மீண்டும் நடத்த திட்டமா? #INDIAN 3

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், சித்தார்த் மற்றும் பலர் நடிக்க இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான படம் ‘இந்தியன் 2’. படத்திற்கு வந்த நெகட்டிவ் விமர்சனங்களும், சமூக வலைத்தளங்களில் வெளியான ‘டிரோல்’களும் இப்படத்தின் வசூலைப் பெரிதும் பாதித்தது. எதிர்பார்த்த தியேட்டர் வசூலும் கிடைக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ‘இந்தியன் 3’ படத்தை பெரிய அளவில் ஓட வைக்க வேண்டுமென படக்குழு முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதனால், மூன்றாம் பாகத்தில் உள்ள சில காட்சிகளை மாற்றி அதற்குப் பதிலாக வேறு காட்சிகளை படமாக்கும் எண்ணத்தில் இருக்கிறார்களாம்.

இது சம்பந்தமாக கமல்ஹாசன், ஷங்கர் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகவும் சொல்கிறார்கள். ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் காப்பியை முடித்த பிறகுதான் ஷங்கர் ‘இந்தியன் 3’ பக்கம் வருவார் என்பதும் கோலிவுட் தகவல். இரண்டில் விட்டதை மூன்றில் பிடிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என்கிறார்கள்.

- Advertisement -

Read more

Local News