இந்தியன் 2 படத்தில் கமல் ஹாசன், விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு, சித்தார்த், ப்ரியா பவானி ஷங்கர், எஸ்.ஜே. சூர்யா, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் புரோமோஷன் வேலைகள் சென்னை, மும்பை என இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றது. இதுமட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் நடத்த படக்குழு திட்டமிட்டு அதற்கு ஏற்ற வகையில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். நேற்றைய தினம் ட்ரெய்லர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் இந்தியன் 2 படத்தின் மீது ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் படம் குறித்த புதிய தகவல் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அது என்னவென்றால், இந்தியன் 2 படத்தில் சித்தார்த் நடித்துள்ள கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க படக்குழு சிவகார்த்திகேயனைத் தான் அணுகியுள்ளனர். ஆனால் சிவகார்த்திகேயனிடம் சரியான தேதிகள் இல்லாததால் அந்த கதாபாத்திரத்தில் சித்தார்த் நடித்துள்ளார்.


மேலும் சிவகார்த்திகேயனுக்கு மனதிற்குள் உலகநாயகன் கமல் ஹாசன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டு விட்டதே என மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். அதன் பின்னர்தான் தனது மன வருத்தத்தைப் போக்க, கமல் ஹாசனின் ராஜ் கமல் புரெடக்ஷன்ஸில் அமரன் படத்தில் நடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது எனவும் பேசப்படுகின்றது.

மேலும் இந்தியன் 2 படத்திற்காக தாடியை சேவிங் செய்ய வேண்டும் என்பதாலும் தான் ஏற்கனவே நடித்துவரும் படங்களின் கண்டினுட்டி மிஸ் ஆகிவிடும் என்பதாலும் இந்தியன் 2 படத்தின் வாய்ப்பினை வேறு வழியில்லாமல் சிவகார்த்திகேயன் வேண்டாம் எனக் கூறினார் எனவும் கூறப்படுகின்றது. தன்னிடம் அணுகிய கதாபாத்திரத்தில் யார் நடிக்கின்றார் என படக்குழுவிடம் கேட்டுத் தெரிந்துகொண்ட சிவகார்த்திகேயன், நடிகர் சித்தார்த்திடம் இது தொடர்பாக பேசியுள்ளார் எனவும் கூறப்படுகின்றது. அப்போது ஏற்பட்ட பழக்கம் இருவருக்குள்ளும் நல்ல பிணைப்பை ஏற்படுத்தியதால் சித்தார்த்தின் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படமான மிஸ் யூ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார் எனவும் கூறப்படுகின்றது.