Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

‘இதுக்கு தான் நான் கல்யாணமே பண்ணிக்கல’ கோவை சரளா ஓபன் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களின் பங்கு மிக முக்கியமானது. ஆனால், பெரும்பாலும் இந்தத் துறையில் ஆண்களே முன்னிலை வகிப்பார்கள். இவ்வாறான சூழலில், மனோரமாவுக்கு அடுத்தபடியாக பட்டையை கிளப்பிய பெண் நடிகை என்றால் அது கோவை சரளாதான். அவர் சமீபத்தில், தான் ஏன் திருமணம் செய்யவில்லை என்பதைப் பற்றி ஒரு பேட்டியில் விளக்கமளித்திருக்கிறார்.

கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் உள்ளிட்ட முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் நடித்த கோவை சரளா, 750 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். குறிப்பாக, கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெற்ற வாழைப்பழ காமெடியும், நடனம் ஆடும் காமெடியும் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியது. பின்னர், வடிவேலுவுடன் விரலுக்கேத்த வீக்கம் படத்தில் அசத்தலாக நடித்தார். அதேபோல, விவேக்குடன் ஷாஜஹான் உள்ளிட்ட படங்களில் இணைந்து, தன் தனித்துவத்தை சிறப்பை நிரூபித்தார் கோவை சரளா.

காலம் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பதற்கேற்ப கோவை சரளா இன்றும் பிஸியான நடிகையாக திகழ்கிறார். னது நகைச்சுவை திறமையால் அனைவரையும் சிரிக்க வைக்கும் அவர், சமீபத்தில் அரண்மனை 4 படத்தில் நடித்திருந்தார்.அடுத்ததாக அகங்குவா திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில், தனது திருமணம் பற்றிய கேள்விக்கு சமீபத்திய பேட்டியில் பதிலளித்துள்ளார் கோவை சரளா.அவர் பேட்டியில், “பிறக்கும்போது தனியாக பிறக்கிறோம்; இறக்கும்போதும் தனியாகத்தான் இறக்கிறோம். இடையே உறவுகள் எனக்கு தேவையில்லை என்று தோன்றியது. சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் காரணமாகவே திருமணம் செய்யவில்லை.திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொண்ட பலரும், அந்த குழந்தைகளால் கைவிடப்பட்டு தனியாக வாழ்ந்துவருகிறார்கள். யாரையும் சார்ந்து வாழ வேண்டும் என விருப்பமில்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News