ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஹிந்திப் படம் ‘சிக்கந்தர்’ இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த படம் நேற்று இரவே பைரசி இணையதளங்களில் வெளியாகி விட்டது என்பதனால், திரையுலகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக ஒரு படம் திரையரங்குகளில் வெளியான சில நாட்களுக்குப் பிறகுதான் அது பைரசி இணையதளங்களில் காணப்படும். ஆனால் ‘சிக்கந்தர்’ படம் வெளியாவது முன்பே பைரசி வடிவத்தில் இணையதளங்களில் வந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், ஏதோ ஒரு சதி நடந்திருக்கலாம் என படக்குழுவினர் அதிருப்தியடைந்துள்ளனர்.
சுமார் 200 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் இவ்வாறு எளிதாக இணையத்தில் வெளியாகி இருப்பது திரையுலகத்தினரிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சனை ஹிந்திப் படங்களுக்கு மட்டும் அல்லாமல், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிப் படங்களுக்கும் எதிராகவே உள்ளது. இந்த பைரசியை தடுக்க முடியாமல் இருப்பதால், படதொழில் உலகம் கோடிக்கணக்கான இழப்புகளை சந்தித்து வருகிறது.